இதை மட்டும் செய்தால் போதும்… நீங்க தான் பெஸ்ட் கணவர்!!!

19 January 2021, 10:49 pm
Quick Share

லவ் மேரேஜோ, அரேன்ஜ்ட் மேரஜோ எதுவாக இருந்தாலும் தனக்கு வரப்போகும் கணவர் மிகவும் அன்பானவராகவும், பெஸ்டானவராகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பது பெண்ணின் இயல்பு. அப்படிப்பட்ட பெஸ்ட் கணவராக மாற உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். இது பெண்களுக்கும் பொருந்தும். 

1. மனைவியை புரிந்து கொள்ளுங்கள்:

திருமணம் செய்த தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்கள் துணைவருக்கு என்னென்ன பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். தன்னை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் தங்கள் கணவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு பெண்ணுக்கு இருக்கும். முக்கியமான நாட்களில் அவர்களை இம்ப்ரஸ் செய்வதற்கு இது உங்களுக்கு உதவும். 

2. நிதி ஆலோசனை:

வரவு, செலவு உள்ளிட்ட விஷயங்களை உங்கள் மனைவியுடன் ஓப்பனாக பேசுங்கள். அது குறித்து அவர்கள் கொடுக்கும் ஒரு சிறு ஆலோசனை கூட உங்களுக்கு உதவியாக இருக்கலாம். பண விஷயத்தில் எல்லாம் நீ தலையிடாதே என கூறி விட வேண்டாம். இருவருக்கும் சரி சமமான பொறுப்பு உள்ளதை உங்கள் மனைவி உணர்ந்து கொள்ள வேண்டும். நிதி பிரச்சினை என்பது ஒரு குடும்பம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு சவாலாகும். ஆகவே இதனை கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து சமாளிக்க வேண்டும். 

3. மனைவிக்கு முக்கியத்துவம்:

உங்கள் ஃப்ரீ டைமில் உங்கள் மனைவியோடு நேரம் செலவழியுங்கள். தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் மூழ்கி விட வேண்டாம். குட்டி குட்டி விளையாட்டுகளை அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். உங்களின் இந்த செயல் அவர்களுக்கு கண்டிப்பாக சந்தோஷத்தை தரும். ஆகவே கிடைக்கும் நேரத்தை ஒன்றாக செலவிடுங்கள். 

4. மனைவியுடன் சமாதானம்:

ஏதேனும் பிரச்சினை வந்தால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொண்டாலே பாதி பிரச்சினை முடிந்து விடும். ஏனெனில் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசிக் கொண்டாலே அது சமாதானத்தில் முடிந்து விடும். நாம் முதலில் பேச வேண்டுமா என ஈகோ பார்க்க வேண்டாம். இவ்வாறு செய்தால் அது வேலைக்கு ஆகாது. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும். எனவே உங்கள் மனைவியுடன் சமாதானம் ஆவதை கவுரவக் குறைச்சலாக நினைக்க வேண்டாம். 

5. காதலிக்க மறக்க வேண்டாம்:

கணவன் மனைவி உறவை பலப்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது அன்பு தான். அதனை காட்ட ஒரு போதும் தயங்க வேண்டாம். ஐ லவ் யூ சொல்ல மறந்து விடாதீர்கள். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக சொல்லாமல் வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்யுங்கள். 

இந்த டிப்ஸ் நிச்சயமாக உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

Views: - 8

0

0