குப்பைமேட்டில் வளரும் குப்பைமேனிக்கு இத்தகைய மகத்துவமா…???

Author: Hemalatha Ramkumar
20 May 2022, 4:46 pm
Quick Share

*நோய் கிருமிகளின் தாக்கம் மற்றும் ரசாயனங்கள் கலந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால், நம்முடைய சருமத்திலும், முகத்திலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்படி உடலில் ஏற்படக்கூடிய எந்தவிதமான சரும நோயாக இருந்தாலும், அதனை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு.

*குப்பைமேனி இலைகள், உப்பு, மஞ்சள்தூள் மூன்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த கலவையை உடல் முழுவதும் பூசி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இப்படி செய்வதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் சிரங்கு, படை போன்ற சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும்.

*குப்பைமேனியில் குளுக்கோசைடுகள், அகாலிபைன், அல்கலாய்டுகள், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சருமத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளையும் நீக்க கூடிய சக்தி குப்பைமேனிக்கு உள்ளது.

*குப்பைமேனி இலை, கஸ்தூரி மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி வந்தால், நாளடைவில் பருக்கள், கருவளையம், கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

*ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் குப்பைமேனி இலைக்கு உண்டு. உடலில் ஏற்படக்கூடிய அரிப்பை சரிசெய்யும் ஆற்றல் குப்பைமேனி இலைக்கு உண்டு.

* குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் குளிக்கும் போது உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால், நாளடைவில் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குணமாகும்.

*குப்பைமேனி இலையை நன்கு சுத்தம் செய்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, குப்பைமேனி இலை சாறினைக் கலந்து இளஞ்சூடான நிலையில் இறக்கி விடவும். இந்த எண்ணெய் கலவையை சருமத்தில் பிரச்சனை உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

*இப்படி வாரத்தில் ‌இரண்டு முறையாவது குப்பைமேனி இலையை பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Views: - 1092

0

0