அடர்த்தியான, அழகான கூந்தலுக்கான இயற்கை தீர்வுகள்!!!

12 April 2021, 3:20 pm
Quick Share

தலைமுடி உதிர்வு என்பது பெரும்பாலான மக்கள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை ஆகும். இது பல்வேறு காரணங்களால் நிகழ்கிறது. இது

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரையும் பாரபட்சம் இல்லாமல் பாதிக்கிறது.

இதற்கு ஏராளமான பணத்தை செலவிடுகிறோம். ஆனால் உண்மையில்  இயற்கை பொருட்களைக் கொண்டே எப்பேர்ப்பட்ட முடி உதிர்வையும் சமாளித்து விடலாம். எனவே நீங்கள் விரும்பும் அழகான, நறுமணமுள்ள தலைமுடியை பெற  உதவும் மூலிகைகள் மற்றும் எண்ணெய்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

1. கிரீன் டீ: 

கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, இது  உங்கள் தலைமுடியை வளர்க்கவும் உதவும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு கிரீன் டீயில் சாறு குடிப்பது முடி வளர்ச்சியை கணிசமாக அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

2. கற்றாழை: 

கற்றாழை என்பது மற்றொரு பாரம்பரிய தாவரமாகும். இது சருமத்திற்கும் அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கும் புகழ் பெற்றது. கற்றாழையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் முடி உதிர்தலை தடுக்கும் வைட்டமின்கள் உள்ளன. நீங்கள் வீட்டிலே  கற்றாழை முடி மாய்ஸ்சரைசரை தயார் செய்யலாம். 

3. புதினா எண்ணெய்:

இது ஒரு சிறந்த மூலிகை மற்றும் சிறந்த வாசனையை கொண்டுள்ளது. முடி வளர்ச்சிக்கு உதவுவதற்கு புதினா எண்ணெய் ஒரு தேர்வாக இருக்கும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 

4. ரோஸ்மேரி எண்ணெய்: 

ரோஸ்மேரி, சமையல்  தவிர, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சுவாரஸ்யமான பண்பையும் கொண்டுள்ளது.10 முதல் 12 சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை உங்கள் ஷாம்பூவில் சேர்த்து பயன்படுத்த வேண்டும். நீளமான, ஆரோக்கியமான கூந்தலை பெற தினமும் இதைப் பயன்படுத்துங்கள்.

5. வெங்காய சாறு: 

இது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் முடி உதிர்தலைத் தடுக்க இது உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். 

ஒரு வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டவும். இந்த சாற்றை 

உங்கள் உச்சந்தலையில் பயன்படுத்துங்கள். தினமும் இரண்டு முறை  சுமார் 6 வாரங்கள் இதனை தடவினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

Views: - 12

0

0