உங்கள் அழகை கெடுக்கும் மருவிற்கு ஒரே இரவில் தீர்வுகட்டும் எளிய வீட்டு வைத்தியம்!!!

24 November 2020, 8:30 am
Quick Share

அனைவருக்குமே தங்களுக்கு கிளியர் ஸ்கின் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் இது அமைந்து விடாது. ஒரு சிலருக்கு பருக்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு கரும்புள்ளிகள், மருக்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இவற்றில் மருக்கள் முகத்தின் அழகை குறைத்து காட்டும் தன்மை கொண்டது. என்ன தான் அதனை அகற்ற நாம் பாடுபட்டாலும் அது போகவே போகாது. அப்படியே உதிர்ந்தாலும் அது இருந்த இடத்தில் தழும்புகள் இருந்து அழகையே கெடுத்து விடும். 

ஆனால் இனியும் இதனை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். மருக்களை இருந்த இடமே தெரியாமல் போகச் செய்ய ஒரு அற்புதமான மற்றும் எளிய வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் பார்ப்போம். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு இரவு போதும். அப்படிப்பட்ட வைத்தியம் என்ன என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆசையாக உள்ளது அல்லவா… வாங்க பார்க்கலாம். 

இதற்கு உங்கள் சமையல் அறையில் இருக்கும் பூண்டு பற்களில் 6 – 7 வரை எடுத்து கொள்ளுங்கள். பூண்டை தோல் உரித்து அதனை ஒரு உரலில் வைத்து இடித்து கொள்ளவும். ஆறு பூண்டு பற்களில் நமக்கு ஒரு தேக்கரண்டி சாறு கிடைக்கும். பூண்டை மிக்ஸியில் போட்டு அரைக்கவோ அல்லது தண்ணீர் ஊற்றி அரைக்கவோ கூடாது. இந்த வீட்டு வைத்தியத்திற்கு பூண்டு சாறு மட்டுமே ஒரு தேக்கரண்டி தேவைப்படும். 

இந்த பூண்டு சாற்றோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது மரு உதிர்வதற்கான மருந்து நம்மிடம் தயாராக உள்ளது. இதனை ஒரு காட்டன் துணி அல்லது காது குடையும் பட்ஸ் அல்லது காட்டன் பஞ்சில் தொட்டு மருவின் மீதும் அதனை சுற்றியுள்ள இடத்திலும் தடவுங்கள். 

பேஸ்டை பூசிய பிறகு அதன் மீது காயத்திற்கு போடும் சாதாரண பேண்டைட் ஒன்றை ஒட்டி கொள்ளுங்கள். இது ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் காலையில் நீங்கள் பேண்டைட்டை பிரித்து எடுக்கும் போது மரு தானாவே உதிர்ந்து விடும். ஒரு வேலை விழவில்லை என்றால் இந்த வைத்தியத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யுங்கள். நிச்சயமாக மரு உதிர்ந்து விடும். 

உங்களுக்கு முகத்தில் மரு இருக்கும் பட்சத்தில் இந்த மருந்தை தடவ ஒரு வேலை உங்களுக்கு பயமாக இருந்தால் உங்கள் உடலில் வேறு எங்காவது மரு இருந்தால் முதலில் அங்கு தடவி சோதனை செய்து பாருங்கள். இந்த மருந்தால் உங்கள் சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற திருப்தி கிடைத்தவுடன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். எந்த ஒரு வைத்தியத்தையுமே உங்கள்  முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பாக சோதனை செய்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. 

Views: - 24

0

0