COVID-19 யில் இருந்து மீண்ட உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் இது தான் உங்களுக்கான சரியான தீர்வு!!!

By: Poorni
16 October 2020, 12:45 pm
Quick Share

COVID-19 இலிருந்து மீண்ட பிறகு, சிலர் முடி உதிர்தலை அனுபவித்து வருகின்றனர். உடல் பலவீனத்தைத் தவிர, முடி உதிர்தலும் ஒரு சிலருக்கு பெரிய சவாலாக உள்ளது. இந்த முடி உதிர்தலை சமாளிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் பார்ப்போம். முடி உதிர்தலுக்கு சிறந்த தீர்வு தரக்கூடிய தன்மை எளிய வெங்காய சாறுக்கு உண்டு. இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் மறு வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே வெங்காய சாறு வைத்து ஒரு ஹேர் பேக்கை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

செய்முறை:

* ஒரு வெங்காயத்தை அரைத்து சாற்றை பிழியவும். கூடுமான வரையில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள். 

* உங்கள் தலைமுடியை இரண்டு பிரிவுகளாக பிரிக்கவும். ஒரு பருத்தி பந்தினை வெங்காய சாற்றில் முக்கி, சாற்றை உச்சந்தலையில் தடவவும். 30-45 நிமிடங்கள் விடவும். ஒரு பராபென் இல்லாத, லேசான ஷாம்பூவுடன் கழுவவும்.

இதனை பயன்படுத்திய சுமார் இரண்டு வாரங்களில் நீங்கள் முடிவுகளைப் பார்ப்பீர்கள். 

வெங்காய சாறு எவ்வாறு உதவுகிறது?

வெங்காய சாறு உச்சந்தலையில் கூடுதல் கந்தகத்தை வழங்குகிறது.  இது வேர்களை வலிமையாக்க உதவுகிறது. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் புதிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெங்காயத்தின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்றுநோய்களைத் தக்கவைத்து, முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 46

0

0