நீளமான, கரு கருவென இருக்கும் கூந்தலைப் பெற இந்த மூன்று பொருட்கள் போதும்…!!!

Author: Hemalatha Ramkumar
23 October 2021, 11:15 am
Quick Share

நாம் அனைவரும் நீண்ட மற்றும் பளபளப்பான முடியை விரும்புகிறோம். இருப்பினும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் வானிலை, அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகளால், முடி உதிர்தல் பெருகிய முறையில் பொதுவானதாகிவிட்டது. தீர்வுக்காக, நாம் விலையுயர்ந்த ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை அணுகுகிறோம். ஆனால், அவை எப்போதும் வேலை செய்யாது.

உங்கள் முடியின் தரம் மற்றும் வளர்ச்சி உங்கள் உணவைப் பொறுத்தது. எனவே, உங்கள் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கலாம். தலைமுடி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் உங்கள் சமையலறையில் கிடைக்கும் மூன்று எளிய பொருட்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். இது உங்கள் தலைமுடியை நீளமாகவும் வலுவாகவும் வளர்க்கும். இவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வாரத்திற்கு 4-5 முறையாவது பயன்படுத்தி நல்ல முடிவுகளை காணுங்கள்.

◆நெல்லிக்காய்:

இது இயற்கையாகவே கிடைக்கிறது மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. இதில் உள்ள கொலாஜன் உங்கள் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் மாறுவதற்குக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முடி சுமார் ஆறு அங்குலங்கள் வளரும். இது உங்கள் வயது, மரபியல் மற்றும் உணவுமுறையைப் பொறுத்தது. வயது மற்றும் மரபணுவை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நம் உணவில் நிச்சயமாக நம்மால் மாற்றம் செய்ய முடியும்.

◆ஆளி விதைகள்:

ஆளி விதைகளின் இரண்டு தேக்கரண்டி சுமார் 6,400 மில்லிகிராம் ஒமேகாவை உங்களுக்கு வழங்குகிறது. ஒமேகா 3 முடி உதிர்வதை குறைத்து அதனை நீளமாக வளரச் செய்யும் என்பதை உணர்த்தும் பல ஆய்வுகள் உள்ளன.

◆கறிவேப்பிலை:

தினமும் 10-15 கறிவேப்பிலைகளை உணவில் சேர்க்க வேண்டும். அவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் E உள்ளது. இது உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. முடி நரைப்பதை மெதுவாக்க அவை ஒரு சிறந்த ஹேக்.

இவற்றை தினமும் உங்கள் உணவில் சேர்த்து, உங்கள் முடியை நீங்கள் விரும்பும் அளவுக்கு வளரச் செய்யுங்கள்.

Views: - 349

0

0