மூன்றே நாட்களில் பாத வெடிப்பு மறைந்து அழகான பாதங்களை பெற ஒரு இரகசிய டிப்ஸ்!!!

28 November 2020, 5:00 pm
Foot Tips - Updatenews360
Quick Share

தலை முதல் பாதம் வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் அழகாக தெரிய வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்போம். பெரும்பாலானோருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இதனை மூன்றே நாட்களில் நிரந்தரமாக  போக்கக்கூடிய ஒரு அருமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் பார்ப்போம். அழகு என்பது கடவுள் கொடுத்தது என்றாலும் அதனை சரி வர பராமரிப்பது நம் கடமை. 

இந்த வைத்தியத்தை செய்ய ஒரு சிறிய பவுல் எடுத்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் தினமும் பல் துலக்க பயன்படுத்தும் வெள்ளை நிற டூத் பேஸ்டில் ஒரு தேக்கரண்டி, தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி, வாஸ்லின் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை பழச்சாறு 1/2 தேக்கரண்டி ஆகிய பொருட்களை எடுத்து கொள்ளவும். பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு ஜெல் போல உருவாக்கவும். 

வீட்டில் நாம் செய்த பாத மருந்து இப்போது தயாராக உள்ளது. தினமும் இரவு படுக்க செல்லும் முன் இரண்டு பாதங்களையும் வெந்நீரில் சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். சுத்தமான உங்கள் பாதங்களில் எங்கெல்லாம் வெடிப்பு உள்ளதோ அங்கெல்லாம் நாம் தயாரித்த மருந்தை தடவவும். தடவி பிறகு 1/2 மணி நேரம் அப்படியே காய  விட்டு பிறகு தூங்க செல்லுங்கள். 

இரவு முழுவதும் இந்த மருந்தை அப்படியே விட்டு காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முதலில் கிரீமை ஒத்தி எடுங்கள். அடுத்ததாக ஒரு பெரிய பக்கெட் எடுத்து கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு கொள்ளுங்கள். இந்த பக்கெட்டில் உங்கள் இரு கால்களையும் விட்டு ஐந்தில் இருந்து பத்து நிமிடங்கள் ஊற வையுங்கள். 

ஊற வைத்த பின்னர் சாஃப்டாக இருக்கும் ஒரு பிரஷ் எடுத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்க்கவும். இது வெடிப்பு இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய உதவும். பிறகு ஒரு காட்டன் துணி கொண்டு கால்களை நன்றாக துடைத்து  கொள்ளுங்கள். இந்த செய்முறையை வாரம் மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் பாத வெடிப்பு சீக்கிரமே மறைந்து விடும். குறிப்பாக இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. உங்கள் பாதங்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பாக டிரை பண்ணி பாருங்கள்.