பெண்களே உங்கள் முகத்தில் அரும்பு போன்ற மீசை மறைய வேண்டுமா? அதற்கான பாட்டி வைத்தியம் இதோ!

15 February 2020, 5:19 pm
mouth updatenews360
Quick Share

பெண்களுக்கு  முகத்தில் சிறிய  முடிகள் வந்தாலே நன்றாக இருக்காது அதுவும் அரும்பு   போன்ற மீசைகள் இருந்தால் போதும் அவர்களின் முக அழகையே  கெடுத்துவிடும். அதற்கான 

  •  குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து மற்றும் விரலி மஞ்சள்  ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாவு போல அரைத்துக்கொள்ளலாம்.  பின்பு இவற்றை நீரில் கலந்து முடி இருக்கும் இடங்களில் பூசி வரலாம்.  தூங்கும் முன்பு பூசுவது உங்களுக்கு நல்ல பயனை தரும். இதே போல் தொடர்ந்து செய்துவந்தால்   முகத்தில் உள்ள மீசைகள் மற்றும்முடி உதிர்ந்துவிடும்.
  • கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும்  சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல கலக்கிக் கொள்ளலாம். பின்பு முகத்தை சுத்தமாக  கழுவிக்கொண்டு, நீர் காய்ந்த பின் இந்த பேஸ்டை அப்ளை செய்யலாம். இதை தொடர்ந்து  செய்து வந்தால் முகத்தில் உள்ளமுடியின் வளர்ச்சி குறைந்து முடி உதிர்ந்துவிடும்
  • உருளைக் கிழங்கு   மற்றும் பருப்புப்  பொடியை நன்கு கலக்கி  கொள்ளவேண்டும். இவை முகத்தை  பிளீச்சிங் செய்ய உதவுவதால் முகத்தில்  உள்ள முடியின் நிறத்தை மங்க செய்து, முடி இழப்பை  உண்டாக்கும். இதை கிட்டத்தட்ட அரைமணி நேரம்வரை உங்கள்  முகத்தில் அப்ளை செய்து வைக்கலாம்.
  • வாழைப்பழத்தை  மசித்துக்கொள்ளலாம்,  பின்பு அதனுடன் ஓட்ஸ்  பொடியை சேர்த்துக் கொள்ளவும். பின்பு கொஞ்சம்  நீர் ஊற்றி மாஸ்க் போல செய்து கொள்ளலாம். இதை உங்கள் முகத்திற்கு  வாரம்இருமுறை போட்டுவந்தால் முகத்தில் உள்ள முடிகள் உதிர செய்யும்.
  • எலுமிச்சை மற்றும் சர்க்கரை  தேவையான அளவு எடுத்துக்கொண்டு, சர்க்கரையில்   எலுமிச்சையை ஊற வைக்க வேண்டும். பின்பு இதை எடுத்து  உங்கள் முகத்தில் தடவிக்கொண்டு , ஒரு பதினைந்து நிமிடம் கழித்து  குளிர்ந்த நீரில் அதை முகத்தை கழுவிக் கொள்ளலாம்.இதே போன்று வாரம்  இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும்.

Leave a Reply