நாம் அனைவருமே நம்முடைய சருமம் எந்த ஒரு கறையும் இல்லாமல் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று நினைத்து கடைகளில் விற்பனை செய்யும் ப்ராடக்டுகளை சருமத்திற்கு பயன்படுத்துவோம். ஆனால் மிகக் குறைந்த செலவில் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல், கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நம்முடைய சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரித்து, அதனை பளபளப்பாக மாற்றலாம். இது நமது சருமத்திற்கு பாதுகாப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவில் நாம் இதற்கு பணம் செலவு செய்ய தேவையில்லை. அந்த வகையில் நம்முடைய சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, அதனை பளிச்சிட செய்யும் சில சமையலறை பொருட்களை பற்றி பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு
உங்களுடைய சருமத்தின் அமைப்பை இயற்கையான வழியில் பொலிவாக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் எலுமிச்சை சாற்றை தான் பயன்படுத்த வேண்டும். அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் உள்ள சாற்றை உங்கள் சருமத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். ஆனால் எலுமிச்சை சாறு அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு இந்த வைத்தியம் ஏற்றதா என்பதை மருத்துவரை ஆலோசித்த பிறகு தெரிந்து கொள்ளவும்.
பால்
எளிமையான ட்ரிக் மூலமாக பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு இந்த ரகசிய பொருளை நீங்கள் பயன்படுத்தலாம். லாக்டிக் அமிலம் நிறைந்த பால் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை பொறுமையாக அகற்றி அதனை பளபளப்பாக்குகிறது. இதற்கு ஒரு சிறிய காட்டன் பந்து எடுத்து அதனை பாலில் முக்கி உங்களுடைய முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்களுக்கு மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் கேரண்டி.
மேலும் படிக்க: இளநீர் குடிச்சா ஆபத்து வருமா… காரணம் அறிக!!!
தயிர்
தயிரிலும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அதனை மினுமினிக்கச் செய்கிறது. இதன் மூலமாக உங்களுக்கு மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும். இதற்கு வெறும் தயிரை உங்கள் முகத்தில் தடவினால் போதுமானது. தயிரை தடவிய பிறகு 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தேன்
தேனில் பாக்டீரியா மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால் இதனை நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். சுத்தமான தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
வெள்ளரிக்காய்
சருமத்தில் இயற்கையான ப்ளீச்சிங் விளைவு தரக்கூடிய இந்த வெள்ளரிக்காய் நம்முடைய சருமத்தின் தொனியை சமமாக மாற்றி அதனை இன்னும் பளபளப்பாக மாற்றுகிறது. இதற்கு வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி முகத்தில் ஆங்காங்கே வைக்கலாம் அல்லது வெள்ளரிக்காயை அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவலாம். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உங்களுடைய பளபளப்பான சருமத்தை அனுபவியுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.