முகப்பருக்களை அழிக்கும் DIY ஃபேஸ் பேக்குகள்… நீங்களும் டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
4 May 2023, 7:33 pm
Quick Share

நாம் அனைவருமே பிரகாசமான மற்றும் தெளிவான சருமத்தை விரும்புகிறோம். இதற்காக இரசாயனங்கள் கலக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை இயற்கை சிகிச்சைக்கு செல்வது சிறந்த தீர்வாக இருக்கும். அந்த வகையில், முகப்பரு பிரச்சனைகளைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு சில DIY ஃபேஸ் பேக்குகளை இப்போது பார்ப்போம்.

முல்தானி மிட்டி மற்றும் சந்தன ஃபேஸ் பேக்
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி முல்தானி மிட்டி மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை கலக்கவும்.
இப்போது சில துளிகள் தண்ணீர் மற்றும் 2 தேக்கரண்டி சந்தன பொடி சேர்க்கவும். இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற விடவும். இப்போது உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர வைக்கவும்.
முல்தானி மிட்டி உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வையை நீக்கும். மேலும் கற்றாழை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி குறைக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை நிறைந்த சருமம் இருந்தால் இந்த முகமூடியை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவவும்.

மஞ்சள் மற்றும் தேன் ஃபேஷியல்
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். கெட்டியான பேஸ்ட் ஆகும் வரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். உங்கள் கழுத்து உட்பட உங்கள் முழு முகத்திலும் பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். மஞ்சள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். மேலும் பிற பொருட்கள் முகப்பருவைக் குறைக்க உதவும். வாரம் இருமுறை இதைப் பயன்படுத்தவும்.

அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஷியல்
2 தேக்கரண்டி அரிசி மாவு,
1 தேக்கரண்டி தேன், 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒரு சிறிய தட்டில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை உங்கள் தோலில் தடவி, 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர்
உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
தக்காளியில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் கே அதிகம் உள்ளது. மேலும் இது அமிலத்தன்மை கொண்டது. இந்த பண்புகள் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கவும், முகப்பரு ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 339

0

0