வீட்டிலே கண்டிஷனர் செய்ய முடியும்போது அதை ஏங்க கடையில் வாங்குறீங்க… இந்த இயற்கை கண்டிஷனர் மூலம் பட்டு போன்ற கூந்தலை பெறலாம் வாங்க…!!!

12 November 2020, 10:55 pm
Quick Share

அனைவருக்குமே தங்கள் கூந்தல் பட்டு போல பள பளவென்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லோருக்கும் அது அமைவதில்லை. ஒரு சிலருக்கு இயற்கையாகவே சாஃப்டான கூந்தல் இருக்கும். ரஃப்பாக கூந்தல் கொண்ட ஒரு சிலர் ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து கொண்டிருப்பர்.  

ரூபாய் செலவு செய்வது ஒரு புறம் இருந்தாலும் இந்த செய்முறையில் கூந்தலுக்கு எவ்வளவு சேதம் உண்டாகிறது என்பதை ஒருவரும் புரிந்து கொள்வதில்லை. இயற்கையான முறையில் கூந்தலை மென்மையாக மாற்ற பல வழிகள் உள்ளன என சொன்னால் ஒரு சிலரால் நம்பகூட முடியாது. அது எப்படி சாத்தியமாகும் என யோசிப்பார்கள். 

எப்படிப்பட்ட கூந்தலாக இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் இரண்டே பொருட்களை கொண்டு அலை அலையாய் அசைந்தாடும் பட்டுப்போன்ற கூந்தலை பெற்று விடலாம். ஆச்சரியமாக உள்ளது தானே…??? சரி இதனை எவ்வாறு செய்வது என பார்க்கலாம் வாங்க…

அனைவரது வீட்டிலும் கட்டாயமாக தயிர் மற்றும் பயத்தம்பருப்பு ஆகிய இரண்டு பொருட்கள் இருக்கும். ஃபேஸ் பேக் போட பயன்படுத்தும் பொருட்களை தலைமுடியில் பயன்படுத்துவதா என யோசிக்காதீங்க. பயத்தம் மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை தலைமுடி முழுவதும் தடவி கொள்ளவும். தடவிய பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைத்து கூந்தலை சாதாரண தண்ணீர் கொண்டு அலசவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலே போதும். இது உங்கள் கூந்தலுக்கு ஒரு அற்புதமான கண்டிஷனராக செயல்படுகிறது. பலர் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் ஆகிய இரண்டும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். 

இப்போதெல்லாம் ஷாம்பூவுடன் இலவசமாக கண்டிஷனர் கிடைக்கிறது. 

ஆனால் இது செயற்கையான தயாரிப்பு என்பதால் முடிந்த வரை அதனை பயன்படுத்தாமல் விட்டு விடுவதே நல்லது. மேலே கூறி உள்ள இயற்கை கண்டிஷனரை முயற்சித்து பாருங்கள். நிச்சயமாக அசந்து போய் விடுவீர்கள்.

Views: - 27

0

0