ஃபோக்ஸ்வேகன் போலோ – வெண்டோ : புது வடிவம் அறிமுகம்

8 September 2019, 4:33 am
polo
Quick Share

பிரீமியம் வாடிக்கையாளர்களிடையே புகழ்பெற்றத் தயாரிப்புகளான ஃபோக்ஸ்வேகனின் போலோ மற்றும் வெண்டோ சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவர உள்ளது. போலோ ஹேட்ச்பேக் மாடலிலும், வெண்டோ செடான் மாடலிலும் வெளிவர உள்ளன.

ஃபோக்ஸ்வேகனின் இரு மாடல்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. சீட் பெல்ட் ரிமைண்டர், பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை அமைப்பு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இவை இருக்கும். முன்புறம் உள்ள இரு இருக்கைகளுக்கும் ஏர் பேக் வசதி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் போலோ மற்றும் வெண்டோவின் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கப்பெறும்.

இந்த இரு மாடல்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களிலும் வெளிவர உள்ளன. போலோவின் பெட்ரோல் இன்ஜின் 76 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும், டீசல் இன்ஜின் 90 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும். அதேபோல் வெண்டோவின் பெட்ரோல் இன்ஜின் 105 ஹெச்பி பவரையும், டீசல் இன்ஜின் 110 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. போலோவின் விலை ரூ.6.11 லட்சம் முதல் ரூ.10.66 லட்சம் வரையிலும், வெண்டோவின் விலை ரூ.9.46 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரையிலும் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.