இந்தியா சீனா இடையே குறையும் வர்த்தகம்.!!

23 June 2020, 2:12 pm
Indo China - Updatenews360
Quick Share

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து சீனா மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வருகிறது. க

டந்த நிதியாண்டிற்கு முந்தைய ஆண்டில் சுமார் 4 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்து வர்த்தக பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 7 சதவீதம் சரிவடைந்தது.

இதற்கு முன் கடந்த 2013-14 காலக்கட்டத்தில் சீன வர்த்தக பற்றாக்குறை 34 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து பிரதமரின் நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் வீர்த்தக பற்றாக்குறை 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.