தர்பூசணி பயிரிட்டதால் கூடுதல் லாபம்..! விவசாயி மகிழ்ச்சி..!

10 February 2020, 12:41 pm
Quick Share

திருவண்ணாமலை: தர்பூசணி பயிரிட்டதால் கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலானோர் தர்பூசணி பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் மகசூல் நன்றாக உள்ளதாக விவசாயி தெறிவிக்கின்றார்.இப்போது நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும் 60 நாள் பயிரான தர்ப்பூசணி 2 ஏக்கர் அளவில் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி பயிரிட்டு வந்த நிலையில் தற்போது குறைந்து வெயில் ஆரம்பம் ஆக உள்ள நிலையில் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளனர்.

இதற்கு ஒரு ஏக்கர் பயிரிட ரூபாய் 65 ஆயிரம் வரை செலவானதாகவும் , எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து 1 டன் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் இதில் செலவினங்கள் போக ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாலையோரங்களில் விற்பனை தொடங்கி உள்ளதால் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தர்பூசணியை விரும்பி சாப்பிடுகின்றனர்.