மந்த நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா

10 February 2020, 9:56 am
Mahindra and Mahindra - updatenews360
Quick Share

மஹிந்திரா & மஹிந்திராவின் ஒட்டுமொத்த நிகர லாபம் 73 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா வெளியிட்டுள்ள
அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது

காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.12,120 கோடியாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாயானது ரூ.12,893 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.1,396 கோடியிலிருந்து 73 சதவீதம் சரிந்து ரூ.380 கோடியானதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாகன விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டதையடுத்து வருவாய் மற்றும் நிகர லாபம் சரிவை சந்தித்ததாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வாகன விற்பனை 1,33,508 என்ற எண்ணிக்கையிலிருந்து 8 சதவீதம் குறைந்து 1,23,353-ஆனது.

அதே போல டிராக்டா் விற்பனையும் 87 ஆயிரத்து 36ல் இருந்து 6 சதவீதம் குறைந்து 81 ஆயிரத்து 435-ஆக காணப்பட்டது.

மோட்டாா் வாகனம் மற்றும் டிராக்டா் ஏற்றுமதி டிசம்பா் காலாண்டில் 22 சதவீதம் சரிந்து 9,633-ஆக இருந்தது என மஹிந்திரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மந்த நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் வருவாய் 73 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடதக்கது.