ரெனோவின் புதிய அறிமுகம் : ட்ரைபர் எம்.பி.வி – கார்

8 September 2019, 5:36 am
triber
Quick Share

ரெனோவின் முற்றிலும் புதிய ட்ரைபர் எம்.பி.வி ரக கார் ரூ. 4.95 லட்சம், ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 4 வேரியன்டுகள் இடம்பெற்றுள்ளன.

ரெனோவின் முற்றிலும் புதிய ட்ரைபர் எம்.பி.வி ரக கார் ரூ. 4.95 லட்சம், ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 4 வேரியன்டுகள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் எதிர்பார்ப்பிற்கிடையில் ரெனோ நிறுவனம் தயாரித்து வந்த புத்தம் புதிய ட்ரைபர் எம்.பி.வி ரக கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய அடிப்படை வேரியன்ட் மாடல் ரூ. 4.95 லட்சம் விலையிலும், உயர் ரக மாடல் ரூ. 6.49 லட்சம் விலையிலும் களமிறங்கியுள்ளது.

இந்த காருக்கான முன்பதிவு செய்யும் பணிகள் கடந்த ஆகஸ்டு 17ம் தேதி முதல் தொடங்கியது. ரூ. 11 ஆயிரம் முன்பணம் கொடுத்து, ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக ரெனோ டீலர்ஷிப்புகளை அணுகியும், வாடிக்கையாளர்கள் இந்த காரை புக்கிங் செய்து வந்தனர்.

கடந்த ஜூன் மாதம் உலக பார்வைக்கு வெளியான ட்ரைபர் கார் CMF-A பிளாட்பாரமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ரெனோவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கிவிட் மாடலும் இதே பிளாட்பாரமில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் புதிய வடிவமைப்பில், இந்திய சந்தைக்கு ஏற்ற தனித்துவனமான தாத்பரியங்களுடன் ரெனோ ட்ரைபர் கார் காட்சியளிக்கிறது. சப்-4 மீட்டர் எம்.பி.வி ரகத்தில் தயாராகியுள்ள ட்ரைபர் காருக்கு இவை அனைத்தும் ப்ரீமியம் தர அம்சங்களை கூட்டுகின்றன.

முன்பக்கத்தில் குரோம் பட்டைகளால் மெருகூட்டப்பட்ட பெரிய கிரில், நடுப்பக்கத்தில் ரெனோ லோகோ, கவர்ந்திழுக்கும் முகப்பு விளக்குகள், சென்ட்ரல் ஏர் இன்டேக் கொண்ட முன்பக்க பம்பர்கள், எல்.இ.டி பகல் நேர விளக்குகள் என புதிய ட்ரைபர் கார் ஸ்மார்ட் தோற்றத்தில் ஜொலிக்கிறது.

எனினும் பக்கவாட்டு பகுதி எளிமையாக உள்ளது. எங்கும் கருப்பு பட்டைகளால் காட்சி தரும் இடத்தில் 15 இஞ்ச் அலாய் சகக்ரங்களுடன் கூடிய ஸ்டார் வடிவிலான வீல் ஆர்குகள் மற்றும் கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில் இடம்பெற்றுள்ளன.

காரின் பின்பகுதியில் மெல்லியதாக இழுத்துவிட்டது போல இருக்கும் டெயில் விளக்குகள், பதிவெண் பலகைக்கு மேலே வீற்றிருக்கும் ‘TRIBER’ பேட்ஜ், பிரேக் லைட்டுடன் இணைக்கப்பட்ட சிறியளவிலான ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் பின்பகுதி பம்பருடன் இடம்பெற்றிருக்கும் சில்வர் முலாம் பூசப்பட்ட ஸ்கெஃப் பிளேட்டுகள் என அங்கேயும் எளிமை குடி கொண்டுள்ளது.

புதிய ட்ரைபர் காரின் உட்கட்டமைப்பில் ப்ரீமியம் தர அம்சங்களின் ஆட்சி தான். பலதரப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய டூயல் டோன் டேஷ் போர்டு, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை ஒருங்கே பெற்ற 8.0 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

இடம்பெற்றுள்ள LED இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசி வென்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ற பாதுகாப்பு விதிகள் உள்ளிட்ட அம்சங்கள் கவனமீர்க்கின்றன.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே உள்ளது. இதன் 999 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்.எம் டார்க் திறன் உள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது.

ஏழு இருக்கைகள் வசதி இருந்தாலும், இந்த காரின் கடைசி இருக்கைகளில் குழந்தைகள் மற்றும் உருவத்தில் சிறியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே உட்கார முடியும். எனினும், இதை 5 சீட்டர் மாடலாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வரிசையில் சிறியவர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையிலான இருக்கையை எளிதாக கழட்டி மாட்ட முடியும். இதன்மூலம் 625 லிட்டர் பூட்ரூம் இடவசதி கிடைக்கும். 3,990 மி.மீ நீளம், 1.739 மி.மீ அகலம், 1,643 மி.மீ உயரம், 2,636 மிமீ வீல் பேஸ் மற்றும் 182 மி.மீ கிரவுண்டு கிளியரன்ஸை இந்த கார் பெற்றுள்ளது.

இந்தியாவின் எம்.பி.வி ரக செகமென்ட் விற்பனையில் சப்- 4 மீட்டர், 7 இருக்கைகள் கொண்ட மாடலாக வெளிவந்துள்ள ரெனோ ட்ரைபர் கார், டட்சன் கோ+ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா கார்களுக்கு சரிநிகர் போட்டியை உருவாக்கும்.

மெட்டல் மஸ்டர்டு, ஃபியரி ரெட், மூன்லைட்டு சில்வர், ஐஸ் கூடு வொயிட், எலெக்ட்ரிக் ப்ளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் புதிய ரெனோ ட்ரைபர் கார் விற்பனைக்கு கிடைக்கும். இதில், ஃபியரி ரெட் சிறப்பு வண்ணத் தேர்வு மாடலாக இருக்கிறது