அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ… அதுவும் வட்டி விகித மாற்றம் இன்று முதலே அமல்!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 5:53 pm
SBI Case Arrest - Updatenews360
Quick Share

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாகவும், இந்த வட்டி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து, பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டியை உயர்த்தியது.

கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருந்தது. வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்கும்.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ, கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 1455

0

0