ஜி.எஸ்.டி. வரி குறைப்பு கோரிக்கை : ‘அசோ­செம்’ அமைப்பு கோரிக்கை

19 March 2020, 5:31 pm
ASSOCHAM-UPDATENEWS360
Quick Share

இந்­திய வர்த்­தக தொழி­லக கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், முதலீடுகளை அதி­க­ரிக்க கூடிய வகை­யில், அடுத்த ஆறு மாதங்களுக்கு, ஜி.எஸ்.டி.-யின் அனைத்து பிரிவுகளிலும் வரியின் அளவினை குறைத்திட வலியுறுத்துகின்ற கோரிக்கையை அசோசெம் அமைப்பின் சார்பில் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்து இருக்கின்றது.

அசோ­செம் அமைப்­பின் தலை­வர் நிரஞ்­சன் ஹிரா­நந்­தனி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு தகுந்த ஆலோ­சனைகளை வழங்கி இருக்கின்றார். அவரது ஆலோசனைகளில், மிகவும் முக்கியமாக, ஜி.எஸ்.டி.-யின் அனைத்து படி நிலை­க­ளி­லும், வரி விகிதத்தை 25 % சதவிகிதத்தை இனி வரவிருக்கும் ஆறு மாத காலங்களுக்கும் குறைத்திட வேண்டும் என்கின்ற ஆலோசனையை வலியுறுத்தி இருக்கின்றார்.

இந்திய அரசாங்கத்திற்கு, ஜி.எஸ்.டி . வரி குறைப்பின் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கு, ­கூடு­த­லாக, 1.20 லட்­சம் கோடி ரூபாய் பற்­றாக்­குறை ஏற்­படக்கூடும். ஜி.எஸ்.டி.வரியினை குறைப்பதன் மூலமாக,நிச்­ச­ய­மாக மத்திய அரசாங்கத்திற்கு நிதிப் பற்­றாக்­குறை ஏற்­படுவது உறுதியாகும்.

இந்தியா முழுவதிலும், ஜி.எஸ்.டி. வரியினை குறைப்­ப­தன் மூலமாக, வணி­க நிறுவனங்கள் அனைத்தும், தங்களது வரியினை செலுத்துவதற்கு நிச்சயமாக முன் வரக்கூடும் என்பது உறுதியாகும். மேலும், ஜி.எஸ்.டி.. வரியினை அதிகரிப்பதன் மூலம் வருகின்ற வரி வருவாயை காட்டிலும் நிச்சயம் ஜி.எஸ்.டி. வரியினை குறைப்பதன் மூலமாக, அனைத்து இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வரியினை செலுத்துவதன் மூலமாக, வரி வருவாயானது மத்திய அரசாங்கத்திற்கு நிச்சயமாக அதிகரிக்கும் என்கின்ற ஆலோசனைகளையும், அசோ­செம் அமைப்­பு தெரிவித்து இருக்கின்றது.