கொரோனா தடுப்பூசிக்காக சீரம் நிறுவனத்துடன் பங்களாதேஷ் மருந்து நிறுவனம் ஒப்பந்தம்..!

30 August 2020, 5:04 pm
corona_vaccine_updatenews360
Quick Share

பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு படியாக, பெக்ஸிமோ எனும் பங்களாதேஷ் மருந்து நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க அடார் பூனவல்லாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை எஸ்.ஐ.ஐ யிடமிருந்து முன்னுரிமை அடிப்படையில் பெற்ற முதல் நாடுகளில் பங்களாதேஷ் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முதலீடு தடுப்பூசிக்கான முன்கூட்டிய வைப்புத்தொகையாக கருதப்படும்.

“தடுப்பூசி உலகளவில் பதிவுசெய்யப்பட்டவுடன், அதைப் பயன்படுத்தும் முதல் நாடுகளில் பங்களாதேஷ் ஒன்றாக இருக்கும் என்று பெக்ஸிம்கோவிடம் நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடிந்தது.” என்று பிபிஎல் அதிபர் ஷயான் எஃப் ரஹ்மான் தெரிவித்தார்.

“இது சீரம் இந்தியா மற்றும் பெக்ஸிம்கோ இடையேயான உறவின் ஆழம் மட்டுமல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவின் வெளிப்படை.” என அவர் மேலும் தெரிவித்தார்.

பெக்ஸிமோ மற்றும் எஸ்ஐஐ இடையேயான ஒப்பந்தம் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0