கிராமத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் “பாட்டா“!
28 August 2020, 9:39 amகாலணி விற்பனையில் முக்கிய நிறுவனமான பாட்டா நிறவனம் 100 புதிய விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் காலணி விற்பனையில் முன்னணி நிறவனமாக பங்குவகிக்கும் பாட்டா நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை வைத்துள்ளது. இருப்பினும் நடப்பாண்டில் மேலும் 100 விற்பனையகங்களை திறக்க திட்மிட்டுள்ளது.
கொரோனா பிரச்சனையால் பல்வேறு பொருட்கள் சேவைக்கான தேவை குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கூடுதலாக விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டுக்குள் 500 விற்பனையகங்களையும் திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின் முக்கிய நோக்கம், கிராமத்தில் வசிப்பவர்களும் தங்கள் காலணி தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. நகரங்கள், பெருநகரங்களில் பாட்டா என்றாலே நல்ல பெயர் உண்டு.
இதனால் கிராம மக்களுக்கும் தங்களது நிறுவனத்தின் பெயரும் பொருள் சென்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும், கிராமப்புற பொருளாதாரம் மேம்படவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் தங்களது தயாரிப்பு விற்பனை அதிகரிக்கும் என பாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.