2020-21 நிதியாண்டில் வளர்ச்சி எப்படி..? பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்..!
29 January 2021, 2:02 pm2021 ஏப்ரல் 1’ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் பட்ஜெட் பிப்ரவரி 1’ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், முன்னதாக நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தின் நிலையை விவரிக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் தலைமையிலான குழு எழுதிய பொருளாதார ஆய்வு 2020-21, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் நிலை மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், 2021-22 நிதியாண்டில் வலுவான மீட்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 23.9 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமாகவும் சுருங்கியது.
மேலும் 2020-21 முழு நிதியாண்டில், 7.7 சதவிகிதம் சுருங்குவதையும், அடுத்ததாக வி-வடிவ மீட்பையும் கணித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) 11 சதவீதம் வளர்ச்சியடையும் என அவர்கள் கணித்துள்ளனர்.
எனினும் பொருளாதார ஆய்வறிக்கை குறித்த முழுமையான தகவல்கள் பிற்பகல் 2.30 மணிக்கு, தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கும்போது விரிவாக கூறுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
0