வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஜாக்பாட்..? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டம்..!
23 January 2021, 7:46 pmவரவிருக்கும் பட்ஜெட் திட்டத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வரிச்சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தேவையை அதிகரிக்கும் என்று தெரிகிறது என ஆலோசனை நிறுவனமான பி.டபிள்யூ.சி இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்த நிலையில், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டன.
பின்னர் ஊரடங்கு தளர்த்தஒப்பட்டாலும், பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்து வருவதை தொடர்கின்றனர். சில நிறுவனங்கள் 2021 வரை கூட வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளன.
இந்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் வருமான வரியில் சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
பட்ஜெட்டுக்கு முந்தைய அமர்வில் உரையாற்றிய பி.டபிள்யூ.சி இந்தியாவின் மூத்த வரி பங்குதாரர் ராகுல் கார்க், இது குறித்து தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள பட்ஜெட், இந்தியாவில் திட்டமிடப்படாத வரி விளைவுகளை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கான வரிச் சட்டங்களில் திருத்தங்களையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சுங்க வரிகளை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பி.டபிள்யூ.சி இந்தியாவில் மறைமுக வரி நடைமுறைக்கு தலைமை தாங்கும் பிரதிக் ஜெயின் கூறினார்.
0
0