கடன் மோசடியால் videocon நிறுவனத் தலைவர் மீது வழக்குப்பதிவு.!!

24 June 2020, 11:35 am
videocon Chairman cheat - Updatenews360
Quick Share

ஐசிஐசிஐ மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிய கடன்களில் மோசடி நடைபெற்றதாக videocon நிறுவனத் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்குவதற்காக வீடியோகன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டில் ஐசிஐசிஐ, ஸ்டேட் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகளின் சில அதிகாரிகளுக்கம் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் மற்றும் சில வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் கடன் மோசடி செய்ததாக ஏற்கனவே வங்கி அதிகாரி மீது கடன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசரணை நடத்தி வருகின்றனர்.