பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக சரிந்து காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் 5,460 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,960 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.