கொரோனாவால் குலைந்து போன பொருளாதாரம்..!!

14 February 2020, 12:59 pm
China Stock - updatenews360
Quick Share

சீனா : கொரோனாவால் சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கச்சா எண்ணை தேவை குறையும் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

சீனாவின் கொரவலியை பிடித்த கொரோனவால் மக்கள் சீர்குலைந்துள்ளனர். ஏராளமான உயிரிழப்புகள் இன்றி பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி அல்லல் பட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலயதக சீனாவின் பொருளாதாரம், வர்த்தகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை குறையும் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணையின் தேவை வெகு காலமாக குறையாத நிலையில், தற்போது கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்பதால் கடந்த மாதத்தை வைத்து பார்க்கையில் 30 சதவிகிதம் குறைவு என்றுசர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெயின் தேவை தினசரி 2 லட்சத்து 30 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று ஏற்கனவே எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான OPEC அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.