இந்தியாவில் மெல்ல மெல்ல தலைதூக்கும் கொரோனா : தயாரிப்பு ஆலையை மூடுகிறது மகேந்திரா நிறுவனம்..!

22 March 2020, 11:02 am
tata-updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மகேந்திரா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில், 320-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகளவில் காணப்பட்டு வருகிறது. எனவே, இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நமது நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் லாரிகள், கார்களை தயாரிக்கும் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. மும்பை மற்றும் புனேவில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்களை மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் நிலைமை மோசமடைந்தால், திங்கட்கிழமைக்குள் பணிகளைக் குறைக்கவும், செவ்வாய்கிழமைக்குள் கார் தயாரிப்பு ஆலையை மூடவும் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன சி.இ.ஓ. குவென்டர் பட்செக் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாத இறுதி வரையில் ஆலைகள் மூடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தங்களின் ஆலைகள் மற்றும் அலுவலகங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய டிரக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் அரை டஜன் உற்பத்தி ஆலைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply