புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறதா ரிசர்வ் வங்கி?

2 May 2020, 10:30 am
Rupee - Updatenews360
Quick Share

பொருளாதாரத்தை சரி செய்ய புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதுதான் சரியாக தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளே வர்த்தகத்தில் சிக்கி தவிக்கின்றன. பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வருகின்றன. இந்தியாவில் 8 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் சுமார் 18 லட்சம் கோட ரூபாய்க்கு நிவாரணங்கள் தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கடன் சுமை அதிகமாக ஏற்பட்டுள்ளது. தற்போது சந்தைகள் இதை ஈடு செய்ய முடியாது. இதனால் வங்கிகளில் வட்டி விகிதங்கள் உயரவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இதை சரிகட்ட ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதுதான் சரியான வழி என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தனியார் மற்றும் தொழிற்துறையினருக்கு கடன் வழங்க மறுப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த இக்கடான் சூழலில் பொருளாதாரத்தை ஈடுபட்ட மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு கடன் சுமையை நிவர்த்தி செய்ய வல்லுநர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.