பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..! எதிர்பார்ப்புகள் ஈடேறுமா..?

1 February 2021, 11:26 am
nirmala-sitharaman-budget-tablet-afp_625x300_01_February_21updatenews360
Quick Share

வரவுள்ள 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் வாசிக்கத் தொடங்கினார். முன்னதாக அவர், ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு, பாராளுமன்றத்தில் கூடிய மத்திய அமைச்சரவை, பட்ஜெட் 2021’க்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்வதால் மத்திய அரசுக்கு, பிரிண்டிங் செலவுகள் உள்ளிட்ட இதர செலவுகளான ரூ 140 கோடி மிச்சமாகும் என நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் சிக்கலை எதிர்கொண்டு வரும் சூழலில், அனைத்து தொழில் துறைகளுக்கும் சலுகை அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்கள் மற்றும் வேளாண்துறைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு என மத்திய பட்ஜெட்டில் பிரத்யேக அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவதால், ரயில்வே நவீன மாயம் மற்றும் தனியார் மாயம் குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நடுத்தர மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக வருமானவரி விலக்கு வரம்பை உயர்த்துவது பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0