6 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக சரிவை சந்தித்த அந்நிய செலாவணி இருப்பு..!

22 March 2020, 2:47 pm
Quick Share

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கடந்த 13-ம் தேதியுடன் முடிந்த வாரத்தின் நிலவரப்படி, அந்நிய செலாவணி இருப்பு 535 கோடி டாலர் சரிவை கண்டது. அன்றைய தினம் அந்நிய செலாவணி இருப்பு 48,723 கோடி டாலரில் இருந்து 48,189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய ரூபாயின் மதிப்பில் 36,14 லட்சம் கோடியாகும்.கடந்த 6 மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு வந்த அந்நிய செலாவணி இருப்பு, கடந்த 13-ம் தேதி பெரும் சரிவை சந்தித்தது.

இதற்கு முந்தைய வார இறுதியான மார்ச் 6-ல் அதிகபட்சமாக 48,723 கோடி டாலராக இருந்தது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 20 தேதி காலகட்டத்தில் சரிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சரிவுக்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்ததே ஆகும். 378 கோடி டாலர் குறைந்த வெளிநாட்டு பணத்தின் மதிப்பு 48,736 கோடி டாலராக சரிந்தது. மேலும், கடந்த வாரம் இறுதியில் இந்திய ரூபாய் இதுவரை காணாத வகையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75.20 ரூபாயாக குறைந்தது.

கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மட்டும் இந்திய மூலதன சந்தையில் இருந்து ரூ.4,623 கோடியை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். அதோடு, மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பும் 153 கோடி டாலர் குறைந்து 2,947 கோடி டாலராக குறைந்தது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2.21 லட்சம் கோடியாகும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply