தங்கம் விலை மேலே மேலே.!!

27 June 2020, 11:40 am
Gold Rate - Updatenews360
Quick Share

மக்கள் மறந்து போன ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து விற்பனையானது.

ஒரு பக்கம் கொரோனா தொற்றால் மக்கள் திண்டாடி கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 611 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 29 ரூபாய் உயர்ந்து ரூ.4,640க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்து 888 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ரூ. 232 அதிகரித்து ரூ.37,120 ஆக உள்ளது. இதே போல வெள்ளி விலை நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. விலையல் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 53 ரூபாய்ககும் 1 கிலோ பார் வெள்ளி 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.