குறைந்தது தங்கம் விலை..! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

11 August 2020, 3:44 pm
Quick Share

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் தொழில்துறை தேக்கமடைந்துள்ளது.

இதனால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேறு மூதலீடுகளில் இருந்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது மூதலீடு செய்ய தொடங்கினர்.

இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் சமீப காலமாக தாரமாறாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்