கொரோனா உச்சத்திற்கு மத்தியில் சரிவில் தங்கம் விலை… கடை திறந்திருந்தா இப்பவே வாங்கலாம்..!

19 May 2020, 12:38 pm
gold-jewellery_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகமே வீடுகளுக்குள் முடங்கி விட்டது. இந்த சமயங்களில் சானிடைசர், மருந்து, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உச்சம்பெற்று விட்டது. இதையறிந்த பொதுமக்கள் இனி தங்கத்தை வாங்குவதை மறந்து விட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 672 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் தற்போது சரிந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.

இதன்மூலம், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 84 சரிந்து ரூ. 4,494 ஆகவும், சவரனுக்கு ரூ.672 குறைந்து ரூ.35,952ஆகவும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 51.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.51,600-க்கும் வர்த்தகமாகி வருகிறது.

Leave a Reply