அட போங்கய்யா….! மீண்டும் பழைய மாதிரி உச்சம் பெற்ற தங்கம், வெள்ளி!

20 March 2020, 3:27 pm
gold - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இதனிடையே, கடந்த சில தினங்களாக எப்படி ஏறுமுகமாக இருந்து வந்ததோ, அதேபோல இறங்கு முகமாகவும் காணப்பட்டது.

கடந்த இரு நாட்களில் மளமளவென சரிந்த தங்கம் நேற்றும், இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ. 31,272க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று மாலை நேல நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 584 அதிகரித்து ரூ. 31,616க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 73 உயர்ந்து ரூ. 3,952ஆக வர்த்தகமாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,900 அதிகரித்து ரூ.40,200ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 90 காசுகள் உயர்ந்து ரூ.40.20 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.