மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்..! இயல்புநிலைக்குத் திரும்பிய பொருளாதாரம்..?

1 November 2020, 2:48 pm
GST_UpdateNews360
Quick Share

நேற்று முடிவடைந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த பிப்ரவரிக்கு பின்பு மீண்டும் ஒரு லட்சம் கோடியைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ 1.5 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டு பிப்ரவரி முதல் முதல் முறையாக ரூ 1 லட்சம் கோடியைக் கடந்தது என்று நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 31, 2020 வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டிஆர் -3 பி ரிட்டர்ன்ஸ் 80 லட்ச ரூபாய் என நிதியமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ 1,05,155 கோடி. அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ 19,193 கோடி, மாநில எஸ்டி ரூ 5,411 கோடி. மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 52,540 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட ரூ 23,375 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ 8,011 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட ரூ 932 கோடி உட்பட) என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ 95,379 கோடியை விட இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியுள்ளதாக கருத்துக்கள் நிலவி வரும் சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது, பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Views: - 22

0

0

1 thought on “மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்..! இயல்புநிலைக்குத் திரும்பிய பொருளாதாரம்..?

Comments are closed.