Zero-ஆன ஹீரோ நிறுவனம்.! கடும் சரிவு.!!
15 August 2020, 7:55 pmநாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிகர லாபம் சரிவடைந்துள்ளது.
இது குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,119.22 கோடி வருமானம் ஈட்டியது. இந்த வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடுகையில் கணிசமான வீழ்ச்சியாகும்.
வருவாய் குறைந்ததால் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,256.69 கோடியில் இருந்து 95.38 சதவீதம் சரிவடைந்து ரூ.57.78 கோடியானது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் ஜுன் காலக்கட்டத்தில் நிறுவனம் 18.43 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
கொரோனா ஊரடங்கால் நிறுவனத்தின் விற்பனை நடப்பு நிதியாண்டில் 5.656 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா காரணமாகவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிகர லாபம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
0
0