இந்திய நிறுவனங்களின் முதலீடு 40 சதவீதம் அதிகரிப்பு..!

12 February 2020, 1:05 pm
India Investment Increase - updatenews360
Quick Share

வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் கடந்த ஜனவரியில் 210 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. இது, 2019ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான 147 கோடி டாலரை காட்டிலும் 40 சதவீதம் அதிகம்.

அதே 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த முதலீடு 199 கோடி டாலராக காணப்பட்டிருந்தது. கடன் பத்திரங்கள் மூலமாக 36.85 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது.

உத்தரவாதம் அளித்தல் வழிமுறை வாயிலாக 89.07 கோடி டாலா் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டது.இந்திய நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் 79.38 கோடி டாலா் பங்குகள் வடிவில் மேற்கொள்ளப்பட்டதாகும் என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.