இந்திய நிறுவன சட்டங்களில் திருத்தம் : மத்திய அரசாங்கம் தீவிரம்

20 March 2020, 7:01 pm
INDIAN-UPDATENEWS360
Quick Share

இந்திய நிறுவனச் சட்டங்களின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. மேலும், அதற்கான முயற்சிகளிலும் மத்திய அரசங்கமானது ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும், பங்கு வர்த்தக ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிதி நிலை அறிக்கையினை வெளியிட்டாக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்திய பங்கு சந்தையில், பட்டியல் இடப்படாத இந்திய தொழில் நிறுவனங்கள் தங்களின் நிதி நிலை அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும் என்பாது அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு னிருக்கின்றது.

இந்திய நாட்டில், இனிமேல் பட்டியலிடப்படாத தொழில் நிறுவனங்களும் இனி தங்கள் நிதி நிலை சார்ந்த அறிக்கையினை மூன்று அல்லது ஆறு மாத கால இடை வெளியில் அறிவிக்க கூடிய வகையில், தொழில் நிறுவன விதிகளில் திருத்தம் கொண்டு வறுவதற்கு மத்திய அரசாங்கமானது திட்டமிட்டு இருக்கின்றது