கடும் வீழ்ச்சியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்.!!

26 June 2020, 5:55 pm
IMF - Updatenews360
Quick Share

இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் நாலரை விழுக்காடு வரை வீழ்ச்சியடையும் என்று பன்னாட்டு பண நிதியம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகளின் வர்த்தகமே ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில கொரோனா ஊரடங்கால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் நாலரை விழுக்காடு வரை வீழ்ச்சியடையும் என்று பன்னாட்டு பண நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிதியத்தின் தலைமைய பொருளியலாளர் கூறியபோது, நடப்பாண்டில் அதிகமான வீழ்ச்சியை சந்திக்கும் இந்தியா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடையப்போகும் வளர்ச்சி வலிமையானதாக இல்லை என கூறியுள்ளார்.

இரண்டு ஒரு விழுக்காடுக்கும் சற்று அதிகமாக மட்டுமே வளர்ச்சி பெறும் என கூறிய அவர், உலகின் மற்ற நாடுகளை ஒத்த வளர்ச்சியாக இருக்கும் என கணித்துள்ளார்.