இந்திய தொழில் துறை முன்னேற்றம் எப்போது..? இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அறிக்ககை வெளியீடு

20 March 2020, 12:53 pm
indian-updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையினை, விரைவாக கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகள் இந்தியா முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்திய தொழில் துறை மீண்டும் முன்னர் இருந்த நிலையினை அடைவதற்கு, ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஆகும் என்றும், இந்திய தொழில் துறையினர்கள் தொழில் நிலையினை பற்றிய வெளிப்படையான கருத்தை தெரிவித்து இருக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சர்வதேச அளவில், மிகப் பெருமளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய பொருளாதாரத்தை மிகுந்த நெருக்குதலான நிலைக்கு உள்ளாக்கி இருக்கினறது. மேலும், இந்திய தொழில் துறையில் தற்போது ஏற்பட்டு இருக்கின்ற சூழலிலிருந்தும், மீண்டு வருவதற்கு சாத்தியங்கள் இருப்பதற்கு எந்தவிதமான வாய்ப்புக்களும் கண்களுக்கு புலப்படவில்லை என்றும், பொருளாதார ரீதியிலான வளர்ச்சிப் பாதைக்கு, இந்திய நாடு திரும்புவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும், தொழில் துறையினர் தெரிவித்து இருக்கின்றார்கள்.

இந்தியாவில், நடப்பு நிதியாண்டின் , வருகின்ற காலாண்டின் காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலுமான கால கட்டத்திற்குள், கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றும், நடபாப்பு நிதியாண்டில், மீதம் இருக்கின்ற மூன்று காலாண்டு காலங்களில் மட்டும் தான், தொழில் நிறுவனங்கள் செயல்பட இயலும், மேலும், சர்வதேச அளவிலும் நிலைமை சீரடைவதன் மூலமாக, இந்திய நாடு முழுவதிலும் வினியோகச் சங்கிலியானது பாதிப்பின்றி தொடரக்கூடிய நிலையானது உருவாகக்கூடும் என்றும், இந்திய ம் தொழிலகக் கூட்டமைப்பு ‘அசோசேம்’ அறிவித்து இருக்கின்றது.