அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது..! சீனாவின் தொழில்துறை குறித்து ஐபோன் தயாரிப்பு நிறுவனம் அதிரடி..!

13 August 2020, 8:40 pm
foxconn-iphone-apple-updatenews360
Quick Share

ஐபோனைத் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கானின் இணைத் தலைவர் யங் லியு, உலகின் தொழிற்சாலையாக கருதப்பட்ட சீனாவின் நாட்கள் முடிந்துவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் வர்த்தகப் பதற்றம் நிலவுவதால், இது தொழில்நுட்ப நிறுவனங்களை சீனாவிலிருந்து விலகி தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா பக்கம் உற்பத்தித் தொழிற்சாலைகளை மாற்ற திட்டமிட்டு வருகின்றன.

“அதன் படி, இந்தியா, தென்கிழக்கு ஆசியா அல்லது அமெரிக்கா என்றால், ஒவ்வொன்றிலும் ஒரு உற்பத்தி சுற்றுச்சூழல் இருக்கும்” என்று யங் வே லியு கூறினார். இருப்பினும், ஃபாக்ஸ்கானின் உற்பத்தி செயல்பாட்டில் சீனா இன்னும் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் சீனாவின் உலக தொழிற்சாலை நாட்கள் முடிந்துவிட்டன” என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஒப்பந்த உற்பத்தியாளரானஃபாக்ஸ்கான், சீனாவிலிருந்து அதன் உற்பத்தி கட்டமைப்புகளை இதியாவில் அமைப்பதற்காக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டில் 55,000’க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி மேக் இன் இந்தியா முயற்சியை அதிகரிக்கும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் தற்போது ஒப்பந்த உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் வழியாக இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தியைக் கூட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அதன் ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து முதல் ஐபோன் 11’ஐயும் தயாரித்துள்ளது.

மேலும் ஆப்பிள் 6 உற்பத்தி அலகுகளை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றி, சுமார் 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்வதோடு, இந்தியாவின் உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்யும். ஆப்பிள் ஐபோன்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகளையும் விரைவில் இந்தியாவில் தயாரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0