ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு.!!

28 June 2020, 6:32 pm
ITC - Updatenews360
Quick Share

பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐடிசி நிறுவனம் நான்காம் காலாண்டு வருவாய் ரூ.12,560.64 கோடியாக இருந்தது. ஆனால் இந்த வருவாய் முந்தைய நிதியாண்டில் ஒப்பிடும் போது, 4.93 சதவதீம் குறைவாகும்.

இது குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ள ஐடிசி நிறுவனம், நான்காவது காலாண்டில் நிகர லாபம் 9.28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்த செலவினம் 3.14 சதவதீம் குறைந்து ரூ.8,484.93 கோடியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 2019-20 நிதியாண்டில் நிகர லாபம் 21.52 சதவீதம் அதிகரித்து ரூ.15,584.56 கோடியாகவும் வருவாய் 3.07 சதவீதமாக உயர்ந்து ரூ.51,393.47 கோடியாக இருந்தன. நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு ரூ.10.15 ஈவுத் தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக பங்குச்சந்தையிடம் ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.