ரூ.1,178 கோடி மதிப்பில் மாளிகை வாங்கி amaze ஆக வைத்த Amazon நிறுவனர்..!

13 February 2020, 5:08 pm
Amzon Heff - updatenews360
Quick Share

Amazon நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் தலைசுற்றும் மதிப்பில் பிரம்மாண்ட மாளிகை வாங்கி ஷாக் ஆக வைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் வார்னர் எஸ்டேட் மாளிகை அமைந்துள்ளது.

ஹாலிவுட் திரைப்படத்திற்காக கடந்த 1903 ஆம் ஆண்டில் அந்த மாளிகை வடிவமைக்கப்பட்டது. அக்கட்டிடத்தை Amazon நிறுவனர் ஜெப் பெஜோஸ் ஆயிரத்து 178 கோடிக்கு வாங்கியுள்ளார்.

Amazon நிறுவனரான ஜெப் பெஜோஸ் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை விற்றார், அதில் அவருக்கு 29,300 கோடி கிடைத்தது. இந்நிலையில் அந்த பணத்தில் தற்போது 1,178 கோடி ரூபாய்க்கு பெவர்லி ஹில்ஸ் மாளிகையை வாங்கி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது மாளிகையாக இந்த மாளிகை கருதப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் Citadel நிறுவனர் கென் கிரிபின் 1,699 கோடி ரூபாய்க்கு நியூயார்க்கில் மாளிகை வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது.