மார்ச் 2021’க்குள் அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் ஆதார் கட்டாயம்..! மத்திய நிதியமைச்சர் அறிவுறுத்தல்..!

11 November 2020, 12:23 pm
Nirmala_Sitharaman_UpdateNews360
Quick Share

2021 மார்ச் 31’ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிக் கணக்குகளும் அந்தந்த வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.

நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி செயல்முறைக்குள் கொண்டு வரும் பணி முடிவடையவில்லை என்றும், வங்கிகள் இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆதார் உடன் இணைக்கப்படாத பல கணக்குகள் இன்னும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“மார்ச் 31, 2021’க்குள், ஒவ்வொரு கணக்கிலும் தேவைப்படும் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் ஒரு பான் எண் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கணக்கிலும் ஆதார் இருக்க வேண்டும்,” என்று இந்திய வங்கிகளின் சங்கத்தின் 73’வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் கூறினார்.

“டிஜிட்டல் அல்லாத பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊக்கப்படுத்தக் கூடாது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் வங்கி செயல்பட வேண்டும். மேலும் யுபிஐ மூலம் இயக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“யுபிஐ எல்லா வங்கிகளிலும் ஒரு பொதுவான பேச்சு வார்த்தையாக இருக்க வேண்டும்.” என்று நிதியமைச்சர் கூறினார். மேலும் அனைவரும் ரூபே கார்டுகளை மட்டுமே ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வாங்கியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

Views: - 35

0

0