வங்கிக்கு செல்லாமலேயே வங்கி கணக்கு தொடங்கலாம் : லக்ஷ்மி விலாஸ் வங்கியின் புதிய சேவை!!

18 August 2020, 9:47 am
LVB - Updatenews360
Quick Share

சென்னை : சேமிப்பு கணக்கை உடனடியாக தொடங்கும் வகையில் புதிய சேவையை லக்ஷ்மி விலாஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதியதாக வங்கியில் கணக்கை தொடங்குவது மிக சிரமத்துற்குள்ளான விஷயம். இதனால் வங்கி கிளைக்கு செல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி சேவைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

பணப் பரிமாறற்ம் போன்ற அடிப்படை தேவைகளை வீட்டில் இருந்தவாறு பெறுவதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்ய விரும்புகின்றனர்.

இதனால் லக்ஷ்மி விலாஸ் வங்கி டிஜிகோ என்னும் புதிய உடனடி சேமிப்பு கணக்கு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் கணக்குகளில் பண பரிவர்த்தனைகளைத் தொடங்க முடியும். இதற்கான காசோலை புத்தகம், பற்று அட்டை மற்றும் இதர வசதிகளைப் பெற முடியும் என லக்ஷ்மி விலாஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Views: - 41

0

0