கடந்த 17 வருடம் இல்லாத அளவுக்கு நஷ்டம்.! மாருதி சுசூகி நிறுவனம் கவலை.!!
1 August 2020, 9:43 amகொரோனா பொதுமுடக்கத்தால் சுசூகி நிறுவனம் 17 வருடம் இல்லாத வகையில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணம் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார பின்னடைவுகள் பெருமளவு சரிந்தது. இது ஆட்டோ மொபைல் நிறுவனத்தை பெரிதளவு பாதிப்புக்குள்ளாகியது.
குறிப்பாக, டிவிஎஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பொருளாதார பின்னடவுச் சந்தித்துள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குநஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ள மாருதி சுசூகி, பெருமளவு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.3,667.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த முதல் காலாண்டில் 76 ஆயிரத்து 599 வாகனங்கடிளை விற்ற சுசூகி நிறுவனம், 67,027 வாகனங்கள் உள்நாட்டிலும், 9,572 வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. மாருதி சுசகி நிறுவனத்தின் வரலாற்றிலேயே இந்த ஏப்ரல்-ஜூன் மாதங்கள் தான் மிகமோசமானதாக அமைந்துள்ளது.
0
0