முடிவில் ஏற்றத்தை கண்ட இந்திய பங்குச்சந்தைகள்.!!

20 May 2020, 6:51 pm
sensex - Updatenews360
Quick Share

காலையில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தம் சரிந்திருந்த நிலையில், மாலை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலையில் 36 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கியது. பின்னர் ஏற்றத்தில் இருந்த நிலையில் வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 622 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 187 புள்ளிகளும் அதிகரித்தது.

இந்த ஏற்றத்திற்கு HDFC, ரிலையன்ஸ் பங்குகள் உயர்ந்ததே காரணம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமானது. ஆனால் மருத்துவ துறை சார்ந்த பங்குகள் விலை ஏறுமுகத்தில் இருந்தது.