பஞ்சாப் நேஷனல் வங்கியின் வருவாய் எவ்வளவு தெரியுமா?

22 June 2020, 11:00 am
PNB -Updatenews360
Quick Share

நாட்டின் இரண்டாது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வருவாய் அதிகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 2019-20 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.64,306.13 கோடியாகும். முடிவடைந்த நான்காவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.16,388.32 கோடியாக இருந்தது.

இது போல கடந்த 2018-19 நிதியாண்டின் வங்கியின் நிகர இழப்பு ரூ.4,750 கோடியாக அதிகரித்து கணாப்பட்ட நிலையில் தற்போதைய 2019-20 நிதியாண்டின் காலாண்டில் ரூ.697.20 கோடியாக குறைந்துள்ளது.

ரொக்க கடன் வசூல் கடந்த நிதியாண்டின் போது ரூ.10,000 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய நிதியாண்டில் ரூ.8,000 கோடி வரை இருக்கும் என வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நிலவரப்படி வங்கியின் வாராக் கடன் விகிதம் 15.50 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் 14.21 சதவீதமாக குறைந்துள்ளது.

2019-20 நிதியாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.64,306.13 கோடியாகவும், நிகர லாபம் ரூ.363.34 கோடியாக இருந்தது என பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார்.