மும்மூர்த்திகளின் உடைமைகள் ஏலத்திற்கு வருகிறது..!!

12 February 2020, 4:51 pm
Nirav Mallaya Ambani- updatenews360
Quick Share

இந்தியாவின் மோசடி மன்னர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது மும்மூர்த்திகள் தான்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி, தொழிலதிபர் மல்லையா மற்றும் கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் அனில் அம்பானி.

இவர்களின் காஸ்டிலியான உடைமைகளை ஏலத்தில் விற்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, நிரவ் மோடியின் உடைமைகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் இந்திய வங்கிகளுக்கு டாட்டா காட்டிய மல்லையா, செலுத்தப்பட வேண்டிய 10ஆயிரம் கோடிகளுக்காக, அவருடைய தீவு பங்களா, சொகுசு கப்பலை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதே போல சீன வங்ககிளிடம் 6 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானி, கடனை திரும்ப செலுத்த லண்டன் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. பணம் செலுத்தவில்லை என்றால் அவரது உடைமைகளும், சொத்துக்களும் ஏலத்திற்கு வரும் சூழலில் உள்ளது.