பொருளாதார நெருக்கடி குறித்து இன்று நிதியமைச்சர் ஆலோசனை.!!

11 May 2020, 10:06 am
Nirmala - Updatenews360
Quick Share

பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.

கொரோனாவால் நாடு முழுவதும் பெருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு கடன வழங்க ரிசர்வ் வங்கி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபடுவது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலோசனையில் கடன் வட்டி விகித குறைப்பு, கடன் தள்ளி வைப்பு மற்றும் நெருக்கடியான சூழல் குறித்து வங்கிகளின் செயல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.