மூலப்பொருட்கள் தட்டுப்பாடால் தீப்பெட்டி ஆலைகள் மூடும் அபாயம்.!!

16 May 2020, 9:45 am
Kvp Match Box - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : ஊரடங்கு உத்தரவு காரணமாக மூலப்பொருள்கள்ளை வெளி மாநிலங்களில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த தீப்பெட்டி ஆலைகள் கடந்த 2 வாரங்களுக்களுக்கு மேலாக அரசு விதித்த நிபந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது.தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கினாலும் மூலபொருள்கள் தட்டுப்பாடு காரணமாக தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தீப்பெட்டி முக்கிய மூலப்பொருள்களான குச்சி, குளோரைட், கேசின், பைக்ரோமேட் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மரத்தடிகள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குச்சி தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று குளோரைட் புதுச்சேரியில் இருந்தும் கேசின் குஜராத் மாநிலத்தில் இருந்தும் பைக்ரோமேட் மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்தும் வரவேண்டியுள்ளது.

ஊரடங்கு காரணமாக போக்குவரத்தில் சிரமம் இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து மூலப்பொருள்களை கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டிய இடத்தில் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தான் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும்இ எனவே தமிழக அரசு மூலப்பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தற்பொழுது சுழற்சி முறையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூலப்பொருள்களின் தட்டுப்பாடு தொடந்தால் தீப்பெட்டி ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் தொழிhளர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.